புதுதில்லி:
தேசிய கட்சிகளுக்கு கடந்த 2019-20 நிதியாண்டில்அடையாளம் குறிப்பிடப் படாத நபர்கள் மூலம் வந்த நன்கொடை மட்டும் ரூ.3 ஆயிரத்து 377 கோடியே 41 லட்சம்கோடி ரூபாய் ஆகும்.
இந்நிலையில், இந்த நிதியில் சுமார் ரூ.2 ஆயிரத்து 642 கோடியே 63 லட்சம் பாஜகவுக்கு மட்டும் கிடைத்துள் ளது. அதாவது ஒட்டுமொத்த‘அநாமத்து’ நன்கொடைகளில் 78.24 சதவிகிதத்தை பாஜக மட்டும் பெற்றுள்ளது.20 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கொடை வழங்குவோரின் விவரங்களை, அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்குத் தர வேண்டும்.அதற்குக் குறைவான தொகைகளை அளித்தவர் களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய தேவையில்லை.இப்படி 20 ஆயிரத்திற் கும் குறைவாக வந்த நன் கொடைகளாக, பாஜக, காங்கிரஸ், என்சிபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய 7 தேசியக் கட்சிகளுக்கும் மொத்தம் ரூ. 3 ஆயிரத்து முந்நூற்று 77 கோடியே41 லட்சம் கிடைத்துள்ளது.இதில் பாஜக அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 642 கோடியே63 லட்சத்தை, 20 ஆயிரத் திற்கும் குறைவான பெற்ற ரொக்க நன்கொடைகளாக கணக்கு காட்டியுள்ளது. பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி, தனக்கு ரூ. 526 கோடி (15.57 சதவீதம்) வந்ததாக கூறியுள்ளது.