politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

சென்னை உயர்நீதிமன்றம் :- போராட்டங்கள் மக்களின் முழு நேர வேலையாக மாறிவிட்டது.
ச.சா - பொழப்பக் கெடுக்குற நடவடிக்கையா அரசு கொண்டு வருதே..??

 

பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள்:- மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பயங்கரவாதம்.
ச.சா - அதோட தலைமையகம் அமெரிக்காதான்னு சேத்து சொல்லிருக்கலாமே..??

 

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்:- ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் திட்டமில்லை.
ச.சா - அதிவிரைவு ரயில்கள ஏன் குத்தகைக்கு விடப்போறீங்க..??
 

மத்திய அமைச்சர் அமித் ஷா :- பயங்கரவாதத்தை மோடி அரசு சகித்துக் கொள்ளாது.
ச.சா - ஓ..குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா எம்.பி. ஆன மாதிரி... பதவி குடுத்து உக்கார வெச்சுக்குவீங்களோ..??