politics

img

வெறுப்பு அரசியல் வேண்டாம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

சென்னை, ஏப்.1-  கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கை களை ஒன்றுபட்டு  எதிர்கொள்ள வேண்டிய  சூழலில்  வெறுப்பு அரசியல் வேண்டாம் என்றும் மதவெறி சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் சக்தி களிள் வெறுப்பு அரசியலுக்கு மக்கள் இரையாகிவிடக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.மக்களை மத அடிப்ப டையில் பிளவுபடுத்தி மோதலை உருவாக்க முயற்சிக்கும் எந்த நடவடிக்கைக்கும் அரசு சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உயிர்காக்கும் முக்கியப் போராட்டக் களத்தில் உல கமே இறங்கியுள்ளது. ஒருபுறம் அதற்குத் தேவை யான சமூக விலகல், சுய தனிமைப்படுதல் உள்ளிட்ட கடமைகள் மக்கள் முன்பும், சமூக விலகலை உறுதிப் படுத்த மக்களின் அடிப்படைப் பொருளாதார தேவை கள், மருத்துவ சேவை, மருந்து உற்பத்தியில் தொய்வின்மை, சுகாதார வசதிகள் போன்றவற்றை உறுதி செய்யும் கடமை, மத்திய, மாநில அரசுகள் முன்பும் உள்ளன. இந்தியா முழுவதும் சாதி, மதம், அரசியல் வேறுபாடு கடந்து ஒற்றை மனிதராய் இந்த சவால்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதற்கிடையே, புதுதில்லி நிசாமுதீனில் நடை பெற்ற தப்ளிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற உள்நாட்டு, வெளிநாட்டு நபர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன. தம் சொந்த நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும், நோய் பரவாமல் தடுத்திடவும் அங்கு சென்று வந்த வர்கள் கட்டாயமாகத் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். பயண விபரங்களையும் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். தொற்று இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து பரி சோதனை செய்வதும் அத்தியாவசிய தேவையாகும்.

ஆனால், இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, வெறுப்பு அரசியலை விதைக்கும் திட்டத்தோடு சில இந்துத்துவ மதவெறி சக்திகள் மற்றும் அதன் பரி வாரங்கள் செயல்படுகின்றன. சமூக வலைத்தளத்தில் பெரும் பிரச்சாரமாக இது மேற்கொள்ளப்படுகிறது. தனிப்பட்ட அவதூறுகளும் அள்ளி வீசப்படுகின்றன. இச்செயல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனை யையும் அளிப்பதாக உள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒன்றுபட்டு நின்று எதிர் கொள்ள வேண்டிய இந்தச் சூழலில், கடும் உயிரி ழப்பு ஏற்படும் ஆபத்தான வேளையில் கூட, தம் மத வெறி சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் இச்சக்திகளை முறியடிக்க வேண்டும். இவர்களின் வழக்கமான வெறுப்பு அரசியலுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது. இக்கால கட்டத்தில் பல நாடுகளில் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒரு வருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் அனு பவங்கள் உணர்த்துவது இதுதான்.

பொது எதிரி கோவிட் 19தான். இதிலிருந்து திசை திருப்பி தொடர்ந்து மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி மோதலை உருவாக்க முயற்சிக்கும் எந்த நட வடிக்கைக்கும் அரசு சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.