விரலுக்கு கருமை
விடியலுக்காக என்றறியாமல்
வாழ்வுக்கும் கருமை
பூசிக்கொள்ள விலைபெறாதே!
நுனி விரல் கொண்டெழுது
நாட்டின் வரலாற்றை - உன்
ஓட்டின் மூலம்
ஓட்டு உன்னாலே
எழுதப்படும் உன் விதி
உண்மையாய் இல்லையேல்
என்னாகும் உன் கதி
குரல் கொண்டு
பேசியது போதும்- இனி
விரல் கொண்டு
பேசி விதியினை மாற்று
உன் வாக்கு உன் வாழ்க்கை
இதை உள்ளத்தில் ஏற்று
உருவாக்கு –புது
வரலாற்றை...
பொய்யுரை
மயக்கம் தவிர்- உன்
ஒரு விரலால்
பாரத கூன் நிமிர்
உளுதுண்டு வாழவும்
நம்மை உண்மைகள் ஆளவும் - நல்ல
ஆட்சியை எழுது
மனசாட்சியால் எழுது