மதுரை, மே 15-பிரதமர் நரேந்திர மோடியும், தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவ தாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்து வர் சரவணனை ஆதரித்து திமுகதலைவர் முக.ஸ்டாலின் புதனன்று (மே 15) இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அத்தொகுதிக்குட் பட்ட புளியங்குளம் பகுதியில் வீதி வீதியாகச் சென்று காலையில் பிரச் சாரம் செய்தார். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் திண்ணைப் பிரச்சாரத் திலும் ஸ்டாலின் ஈடுபட்டார்.அப்போது மக்களிடம் அவர் பேசுகையில், “கேபிள் கட்டணம் 250 ரூபாய்,300 ரூபாய் அளவுக்கு உயர்ந்து விட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்குவந்தால் கலைஞர் ஆட்சியில் இருந்த100 ரூபாய் கட்டணத்தை மீண்டும்கொண்டுவருவோம். விவசாயி களுக்கு இலவச மின்சாரம் கொடுக்கிறீர்கள்; கடன் தள்ளுபடி செய் கிறீர்கள்; அதை மறுக்கவில்லை. ஆனால் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளுக்கு என்ன செய் வீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். அதற்காகவே இப்போது ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறோம். வறுமையின் காரண மாக நகைகளை அடமானம் வைத்து கடன் கட்ட முடியாமல் தவித்து வரும்ஏழைகளுக்கு உதவும் வகையில் 5 பவுன் வரையிலான தங்க நகைக்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். அதேபோல மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்றார்.மத்தியில் ஆளும் மோடி அரசும், தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசும் தமிழக மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், “விரைவில் தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறக்க உள்ளது. உலகம் சுற்றும் நரேந்திர மோடி இதுவரை வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்துக்காக ரூ.400 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளார். மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தியில் பிரதமராக மோடி இருக்க மாட்டார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கமாட்டார். மத்தியில்மதச்சார்பற்ற நல்லாட்சி அமையும். மாநிலத்திலும் திமுக ஆட்சிக்கு வரும். அப்போது மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்” என்றும் கூறினார்.