politics

img

கொரோனா நிவாரணத்திலும் பாஜகவின் ஏமாற்று வேலை..!

கொரானா நிவாரண அறிவிப்பு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. கூடுதலாக சல்லிகாசு கூட ஒதுக்கீடு செய்யாமல் வாய் பந்தல் போடுகிறார்- மோடிஜி.

விவசாயிகளுக்கு ₹2000 மற்றும் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி- ₹ 500 - இது எது புதுசு. கொரானா வைரஸ் புதுசு. 21- நாட்கள் முடக்கம் புதுசு. இதனால் ஏற்பட்ட கஷ்டங்கள் புதுசு. நிதியமைச்சர் அறிவிப்பு- வெறும் பழைய கஞ்சி- கடிச்சுகிற பட்டவத்தல் வாங்க கூட புதுசா எந்த அறிவிப்பும் இல்லை.

பி.எப் மற்றும் கட்டுமான வாரிய பணம் எப்படி உங்க பணம் மாதிரி அறிவிக்கின்றீர்கள். அது தொழிலாளர்களின் பணம். இது சாவு முதல் காசு. இதை உங்க தர்ம காரியமாக சூறை போட கூடாது. அரசு கஜானாவில் இருந்து செலவழிக்க வேண்டும். பின்னர் அதை ஈடுகட்ட பெரும் பணக்காரர்களிடம் வரி போட்டு வசூல் பண்ணுங்கள்.

-Karumalaiyan