tamilnadu

கொரோனா நிவாரணம் கோரி ஜுன் 9-ல் இடதுசாரி கட்சிகள் போராட்டம்

இடதுசாரி கட்சிகள் போராட்டம்

திண்டுக்கல், ஜுன்.5 கொரானா பாதிப்பு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி திண்டுக்கல்லில் இடதுசாரிக் கட்சிகள் சார்பாக ஜுன் 9ம் தேதி போராட்டம் நடைபெறுகிறது.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூ.7500ம், மாநில  அரசு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். ஊரடங்கு காரணமாக சாகுபடி இழப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும். சிறுகுறு நடுத்தர தொழில் புரிவோருக்கு நிபந்தனையின்றி ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன்களுக்கு 6 மாத கால வட்டித்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தி கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இதனையொட்டி சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் புதனன்று தயாரிப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், சிபிஐ மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்டப் பொருளாளர் ராஜாங்கம், சிபிஐ எம்எல் விடுதலை அமைப்பின் மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. (நநி)