மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் :- ரிசர்வ் வங்கி தரும் உபரி நிதியை எப்படிப்பயன்படுத்துவது என்று முடிவெடுக்கவில்லை.
ச.சா - எப்படினு தெரியாமலா, ரெண்டு வருஷமா அந்த நிதிய கேட்டுட்டு இருந்தீங்க..!!
மத்திய அமைச்சர் ஜவடேகர்:- தரமிழந்த 50 லட்சம் ஹெக்டேர் நிலத்தை வளமானதாக்க இலக்கு.
ச.சா - ஆக்கி அதுல மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பீங்களா..??
செய்தி :- கோவையில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு.
ச.சா - அரசியல் சட்டத்துல அறிவியல் மனப்பான்மைய வளர்க்கணும்னு இருக்குதே.. அரசு செயல்பட்டு அறிவியல் உண்மையை விளக்குமா..??
மத்திய அமைச்சர் பொக்ரியால்:- நமது கலாச்சார சின்னங்களை ஆய்வு செய்தால் புதிய உண்மைகள் வெளிவரும்.
ச.சா - ஆறு வருஷமா உங்க ஆட்சிதான... யாரு தடுத்தா..??