புதுதில்லி:
பெட்ரோல் - டீசல் மீதான வரிகளைக் குறைக்க முடியாததற்கு, காங்கிரஸ் ஆட்சியில் வெளியிடப்பட்ட எண்ணெய் முதலீட்டுப் பத்திரங்கள்தான் காரணம் என்று நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் கூறியிருப்பது உண்மைக் குப் புறம்பானது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
7 ஆண்டுகளில் மோடி அரசுரூ. 22 லட்சம் கோடியை கலால் வரியாக மக்களிடமிருந்து சுரண்டியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல்விலை குறையாதது குறித்து செய்தியாளர்கள் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்விகள் எழுப்பினர்.அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், முந்தைய காங்கிரஸ் அரசானது, ரூ. 1.34 லட்சம் கோடிக்கு எண் ணெய்ப் பத்திரங்களை வெளியிட்டு- அதன்முலம் எரிபொருள் விலையை குறைத்தது. அதனால்தான் தற்போது எங்களால் பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க முடியவில்லை.
கடந்த 7 ஆண்டுகளில் எண் ணெய்ப் பத்திரங்களுக்கான வட்டியாக ரூ. 70 ஆயிரத்து 195 கோடியே 72 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. ரூ. 1.34 லட்சம் கோடி எண்ணெய்ப் பத்திரங்களில், ரூ. 3, 500 கோடி முதன்மைத்தொகை மட்டும் செலுத்தப்பட்டுள் ளது. மீதி ரூ.1.3 லட்சம் கோடி 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.இந்த வகையில், குறிப்பிடத்தக்க தொகை வட்டிக்கும், அசலுக்குமே போய்விடுகிறது. காங்கிரஸ் அரசு வாங்கிய உத்தரவாதக் கடனை அடைக்க வேண்டிய நியாயமற்ற சுமைஅரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் - டீசல் மீதான வரியை குறைக்கவழியே இல்லை என்று பதிலளித்து இருந்தார்.இந்நிலையில், நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கண்டனம் தெரிவித்துள்ளார். விலையை குறைக்க முடியாததற்கு அமைச்சர் கூறும் காரணம் விஷமத்தனமானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது என்று விமர்சித்துள்ளார்.
“2020 -21 நிதியாண்டில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரி மூலம் 4 லட்சத்து 53 ஆயிரத்து 812 கோடி ரூபாயை மக்களிடமிருந்து மோடி அரசு சுரண்டி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் - டீசலுக்கான கலால்வரியாக 22 லட்சத்து 33 ஆயிரத்து 868 கோடியை வாரிக் குவித்திருக்கிறது.மோடி அரசு கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் விலையை 28.87 ரூபாய் அதிகரித்த நிலையில், டீசல் விலையை 28 ரூபாய் 37 காசுகள் உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வின் மூலம் மட்டும் ரூ. 17.29 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டிஇருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்கான உத்தரவாதக் கடன் ரூ. 1.3 லட்சம் கோடியை திருப்பிச் செலுத்துவதற்கான காலஅவகாசம் இன்னும் உள்ள நிலையில்,மோடி அரசால் இந்த நிறுவனங்களுக்கான உத்தரவாதக் கடனில் ரூ. 3500கோடி மட்டுமே 2021 ஆண்டு ஏப்ரல்வரை திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு சொற்ப தொகையை மட்டுமே திரும்பிச் செலுத்திவிட்டு, அனைத்திற்கும் இதற்கு முன் ஆட்சிசெய்த காங்கிரஸ் மீது பழி போடுவது பாஜக அரசின் கையாலாகாத தனத்தை வெளிப்படுத்துவதாக உள் ளது” என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதிலடி கொடுத்துள்ளார்.