வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

வாக்களிக்காத காந்திநகர் மக்கள்

நெல்லையை அடுத்த பேட்டையில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து, குறவர் சமுதாயத்தினர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. அதிகாரிகள் சமரசம் பேசியும் பயனில்லை.

img

அடிப்படை வசதிகள் கோரி மக்கள் போராட்டம் அதிகாரிகள் சமரசத்திற்கு பின் வாக்களித்தனர்

தஞ்சை வல்லம் அருகே உள்ளதுமுன்னையம்பட்டி. வல்லம் திருச்சிசாலையில் அமைந்துள்ள முன்னையம்பட்டி 6 ஆவது வார்டில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

img

செரியலூர் இனாம் பகுதியில் அடுத்தடுத்து இயந்திரம் பழுது

செரியலூர் இனாம் வாக்குச் சாவடியில் தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து 2 முறை இயந்திரம் பழுதடைந்ததால் 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்க இருந்த நேரத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது

img

யாருக்கு வாக்களித்தோம்... உறுதி செய்ய முடியுமா?

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் ‘வாக்களித்தது யாருக்கு என்பதை அறிந்துகொள்ளும் வசதி’ (Voter Verifiable Paper Audit –TRAIL VVPAT)தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு செலுத்து பவர்கள் மட்டுமே பார்க்கமுடியக்கூடிய ஒரு நவீன தொழில்நுட்ப வசதி ஆகும் இது. இந்த வசதி இப்போதுதான் முதல்முறையாக பயன்படுத்தப்படுகிறது

img

16 லட்சம் கான்கிரீட் வீடுகள்

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “தமிழகத்தில் 16 லட்சம் குடிசை வீடுகள் உள்ளன.

img

திண்டுக்கல் சீனிவாசன் காமெடிகள்

ஒரு மாதமாக பிரச்சாரம் செய்தும் திண்டுக்கல் பாமக வேட்பாளர் பெயரை ஜோதிமுத்து என்பதற்கு பதிலாக சோலைமுத்து என்றே வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மீண்டும் மீண்டும் கூறினார்.

img

காவல்துறை குடும்பங்களின் வாக்கு யாருக்கு?

சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் ஏட்டு வீரவேல் தூக்குமாட்டி தற்கொலை. சென்னை கீழ்ப்பாக்கம் ஐஜி அலுவலகத்தில் மணிகண்டன் என்பவர் தனது பிறந்த நாளில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. திருச்சி பெண்கள் சிறையில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 தற்கொலைகள் இப்படி தமிழகத்திலுள்ள பல்வேறு காவல்நிலையங்களில் காவல்துறையினரின் தற்கொலை பட்டியல் சொல்ல முடியாத அளவிற்கு நீண்டு கொண்டே போகிறது.

img

கணக்குத் தீர்ப்போம்!

நவீன இந்திய சுதந்திரத் திருநாடு ஒரு ஜனநாயக நாடாக நீடிக்கப் போகிறதா அல்லது பாசிசசர்வாதிகார சக்திகளிடம் சிக்கப் போகிறதா என்பதைத் தீர்மானிக்கும் நாள் இன்று.

;