articles

img

கண்ணாடிகளுக்கு விடை கொடுங்கள்

கண்ணாடிகளுக்கு      விடை கொடுங்கள்

வாசிக்கப் பயன்படும் கண்ணாடிகளுக்கு விடை கொடுங்கள். பார்வையை மீட்க உதவும் புதிய மருந்துத் துளிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து மருந்தின் உதவியுடன் நோயாளிகள் பார்வை பரிசோதனைக்கான விளக்கப் படத்தில் (eye test charts) உள்ள அதிக வரிகளை வாசிக்கலாம். இதனால் தூரப் பார்வையை சரி செய்யப் பயன்படும் கண் வில்லைகள் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் மற்றும் அறுவைசிகிச்சை இனி கடந்தகால நிகழ்வாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கண்ணாடிகள் இல்லாமல் பார்வையை  மீட்டுத் தரும் மருந்து உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மில்லியன் கணக்கானவர்கள் வயது மூப்பினால் ஏற்படும் பார்வை அல்லது சாளேஸ்வரம் அல்லது வெள்ளெழுத்தால் (Presbyopia) பாதிக்கப்பட்டுள்ளனர். இது முதுமை யின் காரணமாக கண்ணின் விழி வில்லை அதன் வடி வத்தை மாற்றிக்கொள்ளும் திறனை இழக்கிறது. இத னால் அருகில் உள்ள பொருட்கள், எழுத்துகளை தெளி வாகப் பார்க்கும் கண்ணின் திறன் குறைகிறது. பொதுவாக கண்ணாடிகள் அல்லது அறுவைசிகிச்சை இந்த பிரச்சனையை சரிசெய்யப் பயன்படுகிறது. ஆனால்  கண்ணாடிகளை அணிந்துகொள்வதை வசதியற்றதாக பலர் கருதுகின்றனர். அறுவை சிகிச்சை என்பது பல ருக்கு உகந்த தீர்வாக இல்லை. இப்போது தினமும்  இரு முறை மருந்தை பயன்படுத்தினால் இப்பிரச்ச னைக்கு சிறந்த தீர்வாக அது அமையும் என்று நிபு ணர்கள் கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி சமீபத்தில் கோபன்ஹேக னில் நடந்த கண் புரை மற்றும் ஒளிவிலகல் குறைகளை  குணப்படுத்தும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ஐரோப்பிய சங்க மாநாட்டில் (European Society of  Cataract and Refractive Surgeons (ESCRS)) வெளி யிடப்பட்டது. ஒளி விலகல் அறுவைச் சிகிச்சையின் மூலம்  கிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண் புரை போன்ற குறை கள் குணப்படுத்தப்படுகின்றன. புதிய மருந்தை பயன்படுத்திய பெரும்பாலானோர் கண் பரிசோதனை விளக்கப்படத்தில் (eye test charts) கூடுதல் வரிகளை வாசித்தனர். இந்த மருந்து இரண்டாண்டுகள் செயல் திறன் பெற்றது. கண்ணாடிகளை அணிவதால் ஏற்படும் வசதி யின்மைகளில் இருந்து விடுபட விரும்புபவர்கள் அல்லது  அறுவைசிகிச்சை செய்துகொள்ள இயலாதவர்கள், விருப்பமற்ற நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பாது காப்பான மாற்று வழியாக அமையும் என்று நிபு ணர்கள் கூறுகின்றனர். இந்த மருந்தில் உள்ள பைலோகார்பைன் (pilocarpine) கருவிழிக்கு நடுவில் இருக்கும் கறுப்பு நிற, கண்ணுக்குள் நுழையும் ஒளியைக் கட்டுப்படுத்தும் கண் பாவை துளையையும் தசைகளையும் சுருக்கு கிறது. இது கண் வில்லையின் வடிவத்தைக் கட்டுப்படுத்தி  வெவ்வேறு தொலைவுகளில் உள்ள பொருட்களை காண உதவுகிறது. ஸ்டீராய்டு குணமற்ற, வீக்கத்திற்கு எதிராக செயல்படும் டிக்னோஃபினாக் (diclofenac (NSAID)) என்ற மற்றொரு மருந்து வீக்கம் ஏற்படுவதை குறைக்கிறது. இரண்டு மருந்துகள் செய்யும் அற்புதம் கண் மருந்தை ஒவ்வொரு நாளும் இரண்டு முறை  பயன்படுத்திய, அர்ஜெண்டினாவை சேர்ந்த 766 பேர்  இந்த ஆய்வில் பங்கேற்றனர். இந்த மருந்து விழித்தெ ழும்போது ஒரு முறையும் ஆறு மணி நேரத்திற்குப் பிறகு  இன்னொரு முறையும் பயன்படுத்தப்பட்டது. பங்கேற்ற வர்களுக்கு வெவ்வேறு அளவுகளில் மருந்து வழங்கப்  பட்டது. இதன் அடிப்படையில் அவர்கள் மூன்று குழுக்க ளாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு சொட்டு மருந்திலும் நிலையான அளவுள்ள டிக்னோஃபினாக் கலந்திருந்தது. ஆனால் பைலோகார்ப்பைனின் அடர்த்தி 1%, 2% மற்றும் 3% என்ற வெவ்வேறு அளவுகளில் இருந்தது. 1% அடர்வுள்ள  மருந்து கொடுக்கப்பட்ட 148 பேரில் பெரும்பாலும் எல்லோ ரும் பரிசோதனை விளக்கப்படத்தில் இருந்த இரண்டு அல்லது அதற்கும் அதிகமான வரிகளை வாசித்தனர். 2% மருந்து குழுவில் இருந்த 69% நோயாளிகள் அதாவது  248 பேர் மூன்று அல்லது அதற்கும் அதிகமான வரிகளை  வாசித்தனர். 3% மருந்து குழுவில் இருந்த 84% நோயாளி கள் அதாவது 370 பேர். “மருந்து மூன்று விதமான அடர்த்திகளில் கொடுக்கப்  பட்டது. பார்வையில் குறிப்பிடத்தக்க விரைவான, நீடித்த  மேம்பாடு இவர்களிடம் ஏற்பட்டதை இந்த ஆய்வு எடுத்துக்  காட்டுகிறது. முதல் டோசேஜ் மருந்து தரப்பட்டு ஒரு மணி  நேரத்திற்குப் பிறகு யேகர் வரி கண் பரிசோதனை விளக்கப்படத்தில் (Jaeger lines eye chart) நோயா ளிகள் சராசரியாக 3.45 வரிகளை வாசித்தனர்” என்று போனர்ஸ் ஐரிஸில் உள்ள வெள்ளெழுத்து ஆய்வு மையத்தின் (Centre for Advanced Research for Presbyopia) இயக்குனர் டாக்ட ஜியோவான்னா பினாஸி  (Dr Giovanna Benozzi) கூறுகிறார். யேகர் வரி விளக்கப் படம் பார்வையின் கூர்மையை அளவிடப் பயன்படுகிறது. கையில் வைத்துக்கொள்ளக் கூடிய இந்த படம் அட்டை வடிவத்தில் உள்ளது. இதில்  ஏராளமான வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அளவு படிப்படியாகக் குறைகிறது. இதில் மிகச் சிறிய  அளவில் இருக்கும் வரிகளை நோயாளிகள் வாசிப்பதை  வைத்து யேகர் மதிப்பு அல்லது யேகர் எண் கொடுக்கப்படு கிறது. இதை வைத்து நோயாளிகளின் பார்வைக் கூர்மை  நிர்ணயிக்கப்படுகிறது. “1% பைலோகார்பைன் கொடுக்கப்பட்ட குழுவில் இருந்தவர்களில் 99% நோயாளிகள் அதாவது 148 பேர்  பார்வைத் திறனை அதிகமாகப் பெற்றனர். இவர்கள் இரண்டு அல்லது அதற்கு கூடுதலான வரிகளை வாசித்த னர். வெள்ளெழுத்தை மேலாண்மை செய்வதில் இந்த புதிய மருந்து திறனுள்ள, பாதுகாப்பான, பாரம்பரிய சிகிச்சை முறைக்கு மாற்று முறையாக விளங்குகிறது” என்று பினாஸி கூறுகிறார். கண் மருத்துவத் துறையில் புதிய நம்பிக்கை தற்காலிகப் பார்வை மங்கல், எரிச்சல் மற்றும் தலை வலி போன்றவை மருந்து கொடுக்கப்பட்ட பின் ஏற்படும்  பொதுவான பக்கவிளைவுகள். இந்த கண்டுபிடிப்பு வர வேற்கத்தக்கது. இது குறித்து மேலும் ஆராயப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். “பரவலாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு விரிவான, நீண்ட கால, பல மைய ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். ஆழமான ஆய்வுகள் மருந்தின் பாதுகாப்பு மற்றும் திறனை உறுதி செய்யும்” என்று கண் புரை மற்றும் ஒளி விலகல் குறைகளுக்கு தீர்வு காணும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஐரோப்பிய சங்க (ESCRS) தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் பர்கார்ட்  டிக் (Prof Burkhard Dick) கூறுகிறார். இந்த கண்டு பிடிப்பு கண் மருத்துவத் துறையில் வருங்காலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.