செல்லம்ஸ், உங்களுக்கு அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அண்ணா, அண்ணி என்று பல உறவினர்கள் இருக்கிறார்கள்தானே? அவர்களும் உங்கள் அம்மா, அப்பா போலவே உங்கள் மீது பாசம் காட்டுகிறார்கள்தானே? இதோ இந்த வாரம் உங்களுக்கு ஒரு சொந்தக்காரர் புதிர். நிறைய யோசியுங்கள், ஏதாவது விடை கண்டுடிபிடித்த பிறகு கீழே போய் சரிபாருங்கள். என்ன உறவு? நிர்மலா யாரென்றால் ஞானையா மருமகள். ஆனால் அவள் அனிதாவுக்கு மருமகள் அல்ல. அனிதாவோ ஞானை யாவின் அக்காள்தான். அது மட்டுமில்லை, ஞானையாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அப்படி இருந்தும் நிர்மலா ஞானையாவுக்கு மருமகளாகிறாள். இது எப்படி?
விடைகள்
எப்படியென்றால், அனிதாவின் மகள்தான் நிர்மலா. இதை சரியாகக் கண்டுபிடித்த தங்கங்களுக்கும், கண்டுபிடிக்க முயற்சி செய்த கண்மணிகளுக்கும் பாலர் பூங்கா வாழ்த்துகள்
