politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ:- அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தவித விரிசலுமில்லை.
ச.சா - ரெண்டு கட்சிக்கும் வேற வழியில்லையே..?!?
----
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத் :- ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசியலுடன் தொடர்பில்லை.
ச.சா - நாட்டின் மிகப்பெரிய பொய்யர் யாருங்குற போட்டில மோடி, அமித் ஷாவுக்கு ஈடு குடுக்குறாரே..?!?
-----
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி :- 2025க்குள் 5 டிரில்லியன் என்ற இலக்கை எட்ட முடியாது.
ச.சா - அடுத்த தேர்தல்ல கேள்வி கேட்கக்கூடாதுன்னுதான 2025னு தீர்மானிச்சீங்க..?!?!
-----
மத்திய அமைச்சர் அமித்ஷா :- எளிமையான வாழ்வை நடத்திய ஆதிசங்கரர் வெறும் கால்களில் நாட்டை 7 முறை சுற்றினார்.
ச.சா - நினச்சா விமானத்துல ஏறி சுத்துற மோடிய கிண்டலடிக்குறாரோ..?!?