internet

img

தகவல் பாதுகாப்பு கொள்கையை மீறியதாக கூகுள் ஊழியர்கள் 4 பேர் பணி நீக்கம்

தகவல் பாதுகாப்பு கொள்கையை மீறியதாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த திங்கள் அன்று அதன் அனைத்து ஊழியர்களுக்கும், தகவல் பாதுகாப்பு கொள்கையை மீறிய நான்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக ஒரு மின்னஞ்சலுடன், பணிநீக்கம் செய்ததன் நோட்டீஸும் இணைத்து அனுப்பியுள்ளது என்றும், இது குறித்து விரிவான தகவல் எதுவும் அளிக்க கூகுள் நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சில கூகுள் ஊழியர்கள் கடந்த ஆண்டுகளில் இராணுவப் பணிகள் மற்றும் சீனாவில் தணிக்கை செய்யப்பட்ட தேடல் சேவை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்குள்ளான நிர்வாகிகளைக் கையாள்வது குறித்த பிரச்சனைகள் குறித்து ஆர்ப்பாட்டம் செய்து வந்ததாகவும், அவர்களில் சிலரை பணி நீக்கம் செய்ய, இதுவே வழிவகுத்தது என்றும் கூறப்படுகிறது.

;