internet

img

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்

சென்னை,ஏப்.22- சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத் திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.  சிங்கப்பூரின் டெலி யோஸ்-2 மற்றும் லூம் லைட்-4 ஆகிய இரு செயற்கை கோள்களுடன் சனிக்கிழமையன்று (ஏப்.22) மதியம் 2.19 மணிக்கு  ராக்கெட் விண்ணில் வெற்றி கரமாக பாய்ந்தது. முதன்மை செயற்கை கோளான டெலியோஸ்-2, மொத்தம் 741 கிலோ எடை கொண்டது. இது புவி கண்காணிப்புகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. 16 கிலோ எடை கொண்ட சிறிய செயற்கை கோளான  லூம்லைட்-4, கடல்சார் பாது காப்புக்காக அனுப்பப்பட் டுள்ளது. ராக்கெட்டின் நான்காம் நிலை பகுதியில், போயம்-2 என்ற விண்வெளி ஆய்வு  சாதனங்கள் பொருத்தப் பட்டுள்ளன. இஸ்ரோ, இந்திய வான்வெளி இயற்பி யல் ஆய்வு நிறுவனம் உட்பட  4 நிறுவனங்கள் இணைந்து இந்த சாதனங்களை உள்ள டக்கிய செயற்கை கோள் அறிவியல் ஆய்வுகளில் ஈடு பட சுமார் ஒருமாதம் விண்ணில் வலம் வரும்  என்று இஸ்ரோ தெரிவித் துள்ளது.

;