கேம்ஸ்கேனர்
டாக்குமெண்ட்களை மொபைல் மூலம் ஸ்கேன்செய்து அனுப்புவதற்கு அதிகம் பயன்படுத்தும் கேம்ஸ்கேனர் (Cam Scanner)ஆப் வைரஸ் தாக்குதல் மற்றும் அதிக விளம்பர தொல்லைகள் தருவதாககேஸ்பர்ஸ்கை நிறுவனம் கூகுளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. இதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் கேம்ஸ்கேனர் பிளேஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கேம்ஸ்கேனர் நிறுவனம், தங்களுடைய ஆப்பில் 3ஆம் நபர் விளம்பர நிறுவனமாக இணைந்துள்ள ஆட்ஹப் நிறுவனம்தான் வைரஸ் தாக்குதலுக்கு காரணம் என்றும்தற்போது அந்நிறுவனத்தின் விளம்பரங்கள் நீக்கப் பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த பாதிப்பு ஆண்ட்ராய்ட்5.11.3, 5.11.5, 5.11.7 மற்றும் 5.12.0 ஆகிய பதிப்புகள்கொண்ட மொபைல்கள் மட்டுமே பாதிப்புக்கு உள் ளாகியிருப்பதாகவும், உடனடியாக கேம்ஸ்கேனர் அப்டேட்டை https://www.camscanner.com/ இணையதளம் அல்லது MI App Store மூலமாகபதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ளது இந்த அப்டேட் செய்யப்பட்ட ஆப் இன்னும் கூகுள் பிளேவில் வழங்கப்படவில்லை.எனவே பழைய புதிய ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள் எவரானாலும் உடனடியாக கேம்ஸ்கேனர் மென்பொருளை அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கி அப்டேட் செய்து கொள்ளுங் கள். ஸ்கேனர் தேவையில்லை எனும் பட்சத்தில் உடனடியாக நீக்கிவிடவும்.
யுபிஐ பேமண்ட் கவனம்
தற்போது பிரபலமடைந்துள்ள யுபிஐ (UPI )டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவையில் ஐடி (UPI ID) விபரங்களை அறிந்து கொண்டு பணம் அனுப்பக் கேட்டு (Payment Request Notification) குறுஞ் செய்திகள், வாட்ஸ்அப் தகவல்கள் வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு அறிமுகமில்லாத எண்கள் அல்லது நபர்கள் மூலமாக கிடைக்கும் இத்தகவல்களை உறுதி செய்யாமல்பணம் அனுப்புவதற்கு ஓகே செய்யவேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டிவிட்டர் நிர்வாகிக்கே பாதுகாப்பில்லை
டிவிட்டர் சமூக வலைத்தளத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான ஜாக் டோர்சி(Jack Dorsey)யின் டிவிட்டர் கணக்கு சென்ற வாரத்தில் ஹேக் செய்யப்பட்டது. இதற்கு தாங்களேகாரணம் என சக்லிங் ஸ்க்வாட் என்ற பெயரிலான ஹேக்கர் குழு தெரிவித்துள்ளது. 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடரும் இக்கணக்கை, ஹேக் செய்யப்பட்ட 15 நிமிடங்களிலேயே கண்டறிந்துவிட்டனர். மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு, இடைப்பட்ட நேரத்தில்,மிகவும் வன்முறையை தூண்டக்கூடிய இனரீதியிலான டிவிட்டுகள் பதியப்பட்டன. சில பதிவுகள் @jack என்ற ஜாக்கின் கணக்கில் இருந்து நேரடியாக பதிவு செய்யப்பட்டன. பிற பதிவுகள் பிற கணக்குகளில் இருந்து ரீட்வீட் செய்யப்பட்டன. இது எப்படி நிகழ்ந்தது என்பதற்கு டிவிட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஒருவர் தனது டிவிட்டர் கணக்கை மூன்றாம்தரப்பு சேவை வழங்குனர்கள் மூலமாக பயன்படுத் தும்போது இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. குறுச்செய்தி ஒருங்கிணைப்பு மேம்படுதலுக்காக 2010ஆம் ஆண்டுடிவிட்டர் நிறுவனத்தால் வாங்கப்பட்ட `க்ளவுட்ஹூப்பர்` என்னும் தளத்தின் வழியாக இந்தடிவிட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன.அதாவது, ஒரு டிவிட்டர் பயனாளர் தனது டிவிட்டர்கணக்கில் நேரடியாக சென்று பதிவிடுவதற்கு மாற்றாக, மொபைல் மூலமாக குறுஞ்செய்தி (SMS)அனுப்புவது போன்ற முறையில் டிவிட்டரில் பதிவுகளை இடுவதற்கு க்ளவுட்ஹூப்பர் தளம் சேவைஅளிக்கிறது. அந்த சேவையை பயன்படுத்துவதற்கு அத்தியாவசியமான ஜாக் டோர்ஸியின் சிம் கார்டைஹேக்கர்கள் ‘சிம் ஸ்வைப்பிங்’ எனும் முறையின் மூலம் போலியாக உருவாக்கி அதன் மூலம் இந்த டிவிட்டர் பதிவுகளை இட்டுள்ளனர் என்று விளக்கமளித்துள்ளது.இந்த விளக்கம்தான் நமக்கு ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் எழுப்புகிறது. சிம் ஸ்வைப்பிங்என்பது தொழில்நுட்பத்தில் முன்னேறிய அமெரிக்காபோன்ற நாட்டில்- மிகப்பெரிய தொழில்நுட்பநிறுவனத்தின் நிர்வாகிக்கே ஏற்படுகிறதென்றால், ‘டிஜிட்டல் இந்தியா’வில் இதுபோன்ற நிலையைசாதாரண மக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது கவலைப்படத்தக்கதாகும்.பேஸ்புக் தகவல் திருட்டில் மூன்றாம் நபரானகேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மீது குற்றம் சுமத்தப்பட்டதும்., இதேபோல கேம்ஸ்கேனர் வைரஸ் தாக்குதல் பிரச்சனையில் மூன்றாம் நபரான ஆட்ஹப் போன்ற நிறுவனங்கள் கைகாட்டப்படுவது போலவேடிவிட்டரும் தங்கள் பிழையல்ல என்று விளக்கம் அளித்துள்ளது. மூன்றாம் நபர்களுக்கு அனுமதியளிப்பதன் மூலம், இது போன்ற பிரச்சனைகள் வரும்போது அதில் தங்களுக்கும் தார்மீக ரீதியில் பங்கிருக்கிறது என்பதை இவர்கள் நேரடியாக ஏற்றுக்கொள்வதே இல்லை.
ஆண்ட்ராய்ட் 10
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட ஒவ்வொரு பதிப்பிற்கும் பிரபலமான இனிப்புகளின் பெயர் களை சூட்டி வந்தது. தற்போது இதனைத் தவிர்த்து,வரவிருக்கும் ஆண்ட்ராய்ட் Q பதிப்பு ஆண்ட்ராய்டு10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக புதிய ஆண்ட்ராய்ட்இலட்சணையும் (Logo) உருவாக்கப்பட்டுள்ளது.
கூகுள் கோ செயலி
கூகுள் கோ என்ற பெயரில் யுடியூப், ஜிமெயில்,சர்ச் ஆகியவற்றிற்கான செயலிகளை குறிப்பிட்ட சிலமாடல் கொண்ட (உதாரணம் ரெட்மீ கோ) ஸ்மார்ட்போன்களில் இந்தியா மற்றும் இந்தோனேஷியா மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. இச்செயலிகள் தற்போது உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு5.0 லாலிபாப் மற்றும் அதற்கு பிந்தைய இயங்குதள வடிவங்களில் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் கோ தேடல் செயலியை பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய அளவு 7 எம்பி ஆகும். கூகுள் தேடுபொறி செயலியைப் பயன்படுத்துவது போன்றே உணர்வைத் தரக்கூடியதாக உள்ளது இச்செயலி.கூகுள் கோ செயலியில் ‘லென்ஸ்’ என்று ஓர்அம்சம் உள்ளது. பயனர்கள் சொற்றொடர்களை மொழிபெயர்ப்பு செய்ய இந்த அம்சத்தை பயன் படுத்தலாம். கேமரா மூலமாக வேறு மொழியில் உள்ள அறிவிப்பு பலகைகளைப் படம் பிடித்து நம்விருப்ப மொழிக்கு மாற்றிப் பார்க்கக்கூடிய வசதியும்உள்ளது. இணைய பக்கத்தை சத்தமாக வாசிப்பதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. செயலிகளின் இணைய வடிவத்தை எளிதாக சென்றடைவதற்கும் கூகுள் கோ உதவுகிறது. இதை பயன்படுத்திதேடிக்கொண்டிருக்கும்போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால், பயன்படுத்தும்போது பயனர் இருந்த இடத்தை நினைவில் வைத்து, மீண்டும் இணைப்பு கிடைத்ததும் பயனர் தேடியவற்றிற்கு பதில் தரும் வசதியும் கூகுள் கோ செயலியில் உள்ளது.
=====என்.ராஜேந்திரன்===