புதுதில்லி:
விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்டதால் முடக்கப்பட்ட250 டிவிட்டர் கணக்குகளை மீண்டும் டிவிட்டர் தளம் வழக்கம்போல இயங்க ஆக்டிவேட் செய்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் டிவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கு அளித்த பரிந்துரையின் பேரில் விவசாயிகளின் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி ஆத்திரமூட்டும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறி 250 கணக்குகளை டிவிட்டர்நிறுவனம் முடக்கியது. இந்நிலையில் முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் வழக்கம்போல இயங்க டிவிட்டர் தளம் ஆக்டிவேட் செய்துள்ளது. பேச்சு சுதந்திரத்தின் வெளிப்பாடு எனக்கூறி முடக்கத்தை நீக்கியுள்ளது டிவிட்டர் நிறுவனம். பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் கணக்குகளும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சங்கங்கள் களத்தில் இருந்த
படி விவசாயிகளின் போராட்டம் குறித்து தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.