புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன் என இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட் செய்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் எனக் கூறியிருந்தார்.
சூர்யாவின் பேச்சுக்கு பாஜக மற்றும் அதிமுக சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பலர் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பா.ரஞ்சித் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் @Suriya_offl நாம் துணை நிற்போம்! #StandWithSuriya'
என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.