பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
"GovtOfPakistan" எனும் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் இருக்கிறது. இந்த பக்கம் மூலம் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளை பாகிஸ்தான் அரசு வெளியிடும். இந்த அதிகாரப்பூர்வ பக்கம் தற்போது இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சட்டரீதியான கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், ஐக்கிய நாடுகள், துருக்கி, ஈரான் மற்றும் எகிப்தில் ஆகிய நாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளை இந்தியாவில் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.