internet

img

கூகுள் க்ரோமில் தேவையற்ற விளம்பரங்களை கட்டுப்படுத்த புதிய அப்டேட் கொண்டுவர திட்டம்

கூகுள் க்ரோமில் தேவையற்ற விளம்பரங்களை கட்டுப்படுத்த புதிய அப்டேட் கொண்டு வர கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகின் நம்பர் ஒன் பிரவுசர் என்ற இடத்தில் கூகுள் க்ரோம் தான் உள்ளது. இருப்பினும், நீண்ட காலமாக பயனாளர்களுக்கு, க்ரோமில் வரக்கூடிய விளம்பரங்கள் பெரும் தொல்லையாக இருந்து வந்தது. விளம்பரங்களுக்கு அளவே இல்லாத வகையில், வெப்சைட் முழுவதும் விளம்பர லிங்க் வரத் தொடங்கியது. ஏதேனும் வெப்சைட்டில் ஒரு க்ளிக் செய்தால், மூன்று நான்கு டேப் ஓபன் ஆகி விளம்பரங்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் இன்டர்நெட்டின் வேகமும் குறையத் தொடங்கியது. குறிப்பாக முகம் சுழிக்க வைக்கும் விளம்பரங்களும், ஆபாச விளம்பரங்களும், வைரஸ் இணையதள பக்கங்களும் அடுத்தடுத்து வரத் தொடங்கியது. 

தொழில்நுட்பம் அறிந்த சிலர் ‘Ad Block’ எக்ஸ்டென்ஷனை பயன்படுத்தி விளம்பரங்களே இல்லாமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில், தற்போது கூகுள் க்ரோமின் புதிய அப்டேடில் விளம்பரங்களை கட்டுப்படுத்தும் வசதி கொண்டு வரவுள்ளது. குறிப்பாக ஆபாசம், முகம் சுழிக்க வைக்கும் விளம்பரங்கள் இனி பிரவுசிங் செய்யும் போது வராது. ஒரு வேளை விளம்பரங்கள் வரும் பட்சத்தில், கூகுள் க்ரோம் நோட்டிபிக்கேஷன் ஒன்றை காட்டும். அதில், ”This site shows intrusive or misleading ads” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். பயனர்கள் விருப்பத்துடன் அனுமதித்தால் மட்டுமே அது போன்ற விளம்பரங்கள் தொடர்ந்து வரும். இதற்கு க்ரோமில் Customize > Help > About Google Chrome > Update என்ற பகுதிக்குச் சென்று கூகுள் க்ரோமை அப்டேட் செய்ய வேண்டும்.