internet

img

தமிழ் மொழி குறித்த சர்ச்சை பகுதி நீக்கம்: அமைச்சர்

சென்னை,ஜூலை 27- தமிழ் மொழியின் பழமை குறித்த தவறு பாடப்புத்தகத்தில் உடனடியாக திருத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை பள்ளிக் கல்வி துறை மாற்றி அமைத்தது. கடந்த கல்வி யாண்டில் 1, 6, 9,11 ஆகிய வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்ட ங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, புத்தகங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இந்தநிலையில் ஒரு சர்ச்சை வெளியாகியிருக்கிறது. 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகம் 142-ம் பக்கத்தில் மொழிகள் பற்றிய ஒரு பாடப் பிரிவில் தமிழ் கி.மு.300 ஆண்டுகள் தொன்மை யானது என்றும், அதைவிட சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டு கள் தொன்மை யானது என்றும் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டிருக் கிறது. இந்த பதிவுக்கு தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்று பறைசாற்றி வரும் நிலையில், இந்த பதிவு பல்வேறு விதமான எதிர்ப்புகளை உருவாக்கி விட்டது. வேலூரில் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை யனிடம் செய்தியாளர்கள் கேட்ட தற்கு,“உலக மொழிக ளுக்கெல்லாம் மூத்த மொழியாக நமது தாய் மொழி தமிழ் விளங்கு கிறது. 12 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மை குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த தவறுக்கு காரண மானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட பாடப்பகுதியில் உரிய திருத்தங்கள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு விடப்பட்டுள்ளது” என்றார்.