நமது தொழிற்கல்வி தரமில்லை என்கிறது முதலாளிகள் சங்கம் படித்ததை விட்டு அடியாள் வேலைசெய்யும் மனிதவள நிர்வாக அதிகாரிகள் கவனத்திற்கு!
- கவுரிசங்கர்
***********
சபரிமலை விபத்துகள்,
கும்பமேளா நசுங்கிச் சாவுகள்,
பழனி பயணிகளின்
குடும்பச் சாவுகள்.
மசூதி இடிப்புகள்,
துப்பாக்கிச் சூடுகள்,
சிரியா குழந்தைப் பிணங்கள்,
உயிர்த்தெழுதல் தினத்து
குண்டுவெடிப்புகள்,
ஊழிய நேரத்து
மரண ஓலங்கள்,
என எல்லாவற்றையும்
எல்லாக் கடவுள்களும்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்;
செய்வதறியாது அதிர்ச்சியுற்று நிற்கிறார்கள்;
யாராவது,
நடுங்கிக்கொண்டிருக்கும்
அவர்களின் கைகளைப் பிடித்துக்கொள்ளுங்கள்;
அடுத்தமுறை அவர்களுக்காகவும்
வேண்டிக் கொள்ளுங்கள்;
-டான் அசோக்
***********
என் மீது கோபம் கொள்ளுகின்ற மோடி
ஆதரவாளர்கள் ஆண்குறி பெண்குறி அடைமொழிகளோடு தான் என்னை திட்டு
கின்றனர். அவற்றின் உதவியோடு தான் அவர்
களும் பிறந்தனர் என்பதனை மறந்தவர்க ளாக. தன் தாயை மதிப்பவன் அடுத்தவன்
தாயையும் மதிப்பான். விடைசொல்ல வழியில் லாதவர்கள் வீணர்கள்தானே! அடுத்த புதுப் பொய் ஒன்றை மோடிஜி கூற ஆரம்பித்தி
ருக்கின்றார். தீவிரவாதத்தை ஒழித்துவிட்டால் அதன் விளைவாக ஏற்படுகின்ற பொருளா
தார இழப்பீடுகளை மக்களுக்காக பயன்படுத்துவாராம். பதினைந்து இலட்சத் தைவிட இந்த பம்மாத்து நல்லா இருக்கு.
- நெல்லைக்கண்ணன்.