internet

img

தற்கொலைக்கு தூண்டும் படங்களுக்கு தடை - பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனமானது தற்கொலையைத் தடுக்க கிராஃபிக் சுய தீங்கு படங்களை தடை செய்து அறிவித்துள்ளது

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் தற்கொலை காரணமாக இறக்கின்றனர்.மேலும் ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒரு நபர் இறக்கின்றனர்.இந்நிலையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தன்று பேஸ்புக் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் தற்கொலைக்கு தூண்டும் கிராஃபிக் படங்களையும், ஆபத்தான உள்ளடக்கத்தையும் தடை செய்துள்ளது. இதுபோன்ற உள்ளடக்கம், அதன் புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராமிலும் தேடுவது கடினமாகிவிடும் என்றும் கூறியுள்ளது.