internet

img

சுமார் 419 மில்லியன் பயனர்களின் தொலைபேசி எண்களை ஆன்லைனில் கசியவிட்ட பேஸ்புக்

சுமார் 419 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் ஆன்லைனில் கசியவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவலை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதாக தகவல்கள் வெளியாகி பல சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பதில் தெரிவித்தும் வருகிறது.  

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், சுமார் 419 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களின் தொலைபேசி எண்கள் ஆன்லைன் கசியவிட்டது தெரியவந்துள்ளது. இதில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட பேஸ்புக் பயனர்களின் 133 மில்லியன் பதிவுகள், இங்கிலாந்து பயனர்களின் 18 மில்லியன் பதிவுகள் மற்றும் வியட்நாமில் 50 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பதிவுகள் அடங்கியுள்ளதாக டெக் க்ரஞ்ச் தெரிவித்துள்ளது.