internet

img

ஃபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் வசதி

ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம், டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதனை அடுத்து, இந்த டார்க் மோட் வசதியை சோதனை செய்து வந்தது. இந்நிலையில், ஃபேஸ்புக் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இதனை ஆக்டிவேட் செய்ய எமோஜியை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. மெசஞ்சரில் உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை க்ளிக் செய்து செட்டிங்ஸ் பகுதியில் தெரியும் டார்க் மோட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் திரை முழுக்க இருளாகி இருப்பதை பார்க்க முடியும். டார்க் மோட் ஆக்டிவேட் ஆகியிருக்கும் நிலையில், திரையின் பிரகாசம் குறைக்கப்பட்டிருக்கும். இதனால் குறைந்த வெளிச்சமுள்ள சூழல்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.