internet

img

அமெரிக்காவில் பேஸ்புக் பே சேவை அறிமுகம்!

அமெரிக்காவில் பேஸ்புக் பே என்ற பணப்பரிமாற்ற சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள், கூகுள் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளன. இதன் மூலம் குறித்த நிறுவனங்களின் வழங்கும் வாலட்களில் பணத்தை சேமிக்கவும், பொருட்களை வாங்கிய உடன் ஆன்லைனில் பணப்பரிமாற்றத்தையும் மேற்கொள்ள முடியும். இந்நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனமும் பேஸ்புக் பே என்ற தனது பணப்பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை லிப்ரா என்ற நெட்வர்க்கை பயன்படுத்துகிறது. இந்த சேவையை, பேஸ்புக்கில் மட்டுமின்றி பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றுடன் இணைத்து பயன்படுத்த முடியும். எனினும் தற்போது இச்சேவை அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.