டிவிட்டர் செயலியின் லோகோவை திடீரென அந்நிறுவனர் எலான் மஸ்க் மாற்றியுள்ளார். இந்த புதிய லோகோ தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கினார். இதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த எலான் மஸ்க், தற்போது டிவிட்டர் செயலியின் லோகோவை திடீரென மாற்றியுள்ளார். இந்த புதிய லோகோ தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
நீண்ட நாட்களாக டிவிட்டரின் அடையாளமாக இருந்து வந்த நீல நிற பறவைக்கு பதிலாக, மீம்களில் பிரபலமாக வலம் வரும் ஷிபா இனு வகை நாயின் முகத்தை புதிய லோகோவாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.