internet

img

டிவிட்டரில் எடிட் பட்டன் விரைவில் அறிமுகம்

டிவிட்டர் தளத்தில் எடிட் பட்டன் கொண்டு வருவதற்கான ஆய்வுகள் நடந்து வருவதாக டிவிட்டர் நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான சமுக வலைத்தளத்தில் எடிட் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. ஆனால் டிவிட்டரில் இதுவரை எடிட் செய்யும் வசதி இல்லை. இதற்கிடையில், எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போது, தான் டிவிட்டரை வாங்கினால் முதலில் எடிட் செய்யும் வசதியைக் கொண்டு வருவேன் எனத் தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது நேற்று எடிட் பட்டன் கொண்டு வருவதற்கான ஆய்வுகள் நடந்து வருவதாக டிவிட்டர் நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.