வியாழன், பிப்ரவரி 25, 2021

internet

img

டுவிட்டரில் விரைவில் புதிய வசதி

சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் குரல்வழி தகவலை பகிர்ந்து கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் ட்விட்டர் வழியாக தங்கள் கருத்துக்களை வெளியிடுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் குரல் வழி முறையிலான தகவல்களை பரிமாறுவதற்கு வசதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,. . நேரடியாக குறுஞ்செய்தியாக குரல்வழி தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் முடியும். இந்த தகவல்களை ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் அலெக்ஸ் ஆக்கர்மன் கிரீன் பார்க் என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வசதி தற்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு  பிரேசில் நாட்டில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சோதனைக்கு பின்னர்  ஏனைய நாடுகளில் ட்விட்டர் பயனர்களுக்கும்  இவ்வசதியை பயன்படுத்த வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இது ட்விட்டர் பயனாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

;