புதுதில்லி, டிச.8-
டைப்-1 சர்க்கரை நோயிலிருந்து மக்களை, அதிலும் குறிப்பாக குழந்தைகளைக் காப்பாற்றிட, ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. இதில், மாநி லங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்ச னைகளை எழுப்பும் நேரத்தில் ஏ.ஏ. ரஹீம் பேசியிருப்பதாவது:
நாட்டில் டைப்-1 சர்க்கரை நோய் அனைத்துத் தரப்பு மக்களை யும், அனைத்துத்தரப்பு வயதினரை யும் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக குழந்தைகளைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்நோய்க்கு ஆளானவர்கள் தொட ர்ந்து கண்காணிப்பில் வைத்திருக் கப்பட வேண்டியது அவசிய மாகும். அவர்களின் ரத்த குளுகோஸ் அளவு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வர வேண்டும். இன்சுலின் ஊசிகள் செலுத்தப்பட வேண்டும். சரியான உணவு உட்கொள்ளப்படுதல் வேண்டும். இந்நோய்க்கு ஆளான குழந்தைகள் கல்வி மற்றும் சமூகத் தொடர்புகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
இந்நோய் நாட்டில் தொடர்ச்சி யாக அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. இதுதொடர்பாக சென்ற கூட்டத்தொடரின் போது நான் கேள்வி எழுப்பியிருந் தேன். எனினும் அரசிடம் இதுதொடர்பாக தரவு எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. எனவே, இந்நோய்க்கு ஆளான குழந்தைகளைக் காப்பாற்றிட அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்துகிறேன்.
இவ்வாறு ஏ.ஏ. ரஹீம் கேட்டுக்கொண்டுள்ளார். (ந.நி.)