தற்போதைய நவீன டென்னிஸ் விளை யாட்டு உலகில் பாலின பாகுபாடுகளை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆடவர் பிரிவுகளை போன்றே சரிசமமான அளவில் சர்வதேச தொடர்கள், ஆண்களுக்கு நிகரான அளவில் பரிசுத்தொகை மற்றும் ஸ்பான்சர் சம்பளம் என பல்வேறு செயல்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. டென்னிஸ் பிரிவை பின்பற்றி மற்ற விளையாட்டு பிரிவுகளும் பாலின பாகுபாட்டிற்கு எதிரான செயல் திட்டங்களை ஆய்வு செய்து வரும் நிலையில், கூகுளின் பாலின பாகுபாடு இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடரில் உடைந்துள்ளது.
ஹைலைட்ஸ் வீடியோ
பொதுவாக முக்கிய டென்னிஸ் தொடர்களில் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் நிறுவனத்திடம் இருந்து சிறிதளவு வீடியோ கிளிப்களை பெற்று ஹைலைட்ஸ் வீடியோவை தனது டென்னிஸ் ஸ்கோர் கார்டில் கூகுள் நிறுவனம் பதிவிடுவது வழக்கம். அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் கூகுள் ஹைலைட்ஸ் வீடியோ முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், முக்கிய சர்வதேச தொடர்களில் வீரர்களுக்கான ஹைலைட்ஸ் வீடியோக்கள் மட்டும் முழுவதுமாக கூகுள் ஒளிபரப்பும் செய்யும். மகளிர் பிரிவில் நட்சத்திர வீராங்கனைகளின் ஆட்டத்தை மட்டுமே கூகுள் ஒளிபரப்பி வந்தன. இது கடந்த கால சர்ச்சை என்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவுக்கு மட்டுமே ஹைலைட்ஸ் வீடியோவை கூகுள் தனது ஸ்கோர் கார்டில் ஒளிபரப்பு செய்து வருகிறது. மகளிர் பிரிவில் ஒரு ஹைலைட்ஸ் வீடியோ கூட பதிவிடவில்லை. இந்த விவகாரத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக கூகுள் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.