ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் 'தி சாட்டானிக் வெர்சஸ்' எனும் புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிரபல் ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகங்களில் மிகவும் பிரபலமான 'தி சாட்டானிக் வெர்சஸ்' எனும் புத்தகத்தை இறக்குமதி செய்ய, கடந்த 1988 ஆம் ஆண்டு அப்போதய ஒன்றிய அரசு தடை செய்து உத்தரவிட்டது. இது தொடர்பன ஆவணங்களை ஒன்றிய அரசு அதிகாரிகள் சமர்பிக்கத் தவறியதால், கடந்த 2024 ஆம் ஆண்டு இந்த புத்தகத்தின் மீதான தடையை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மெஹ்தா ஆகியோர் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு சவால் விடுப்பதாகக் கூறிய உச்ச நீதிமன்றம், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.