india

img

இதுதான் பாஜக-வின் Washing Machine!

2014 முதல், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான 25 முக்கிய அரசியல் தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். 
2014-இல் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி, காங்கிரஸில் இருந்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ரனீந்தர் சிங், கிரிஸ்பாசங்கர் சிங், கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், நவீன் ஜிண்டால், அர்ச்சனா பாட்டீல், கீதா கோடா, பாபா சித்திக் மற்றும் ஜோதி மிர்தா ஆகிய 10 பேர் பாஜக-வில் இணைந்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார், பிரபுல் படேல், சாகன் புஜ்பால் மற்றும் ஹசன் முஷ்ரிப் மற்றும் சிவசேனாவில் இருந்து யாமினி ஜாதவ், யஷ்வந்த் ஜாதவ், பாவனா கவாலி மற்றும் பிரதாப் சர்நாயக் ஆகியோர் பாஜக-வில் இணைந்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸில் இருந்து சுவேந்து அதிகாரி, தபஸ் ராய் மற்றும் சோவன் சட்டர்ஜி, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து சுஜனா சவுத்ரி மற்றும் சி.எம்.ரமேஷ்., சமாஜ்வாதி கட்சியில் இருந்து சஞ்சய் சேத் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கே.கீதா ஆகியோர் பாஜக-வில் இணைந்துள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுவுமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு பாஜக "washing machine" செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
 

;