இந்தியாவிலிருந்து மல்லையா, நீரவ் மோடி உள்பட 36 பேர் வங்கிக்கொள்ளை செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக அமுலாக்கத்துறை இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் உள்ள சுசன் மோகன் குப்தா என்பவர் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவிற்கு எதிராக அமுலாக்கத்துறை இயக்குநரக விசாரணை குழு சார்பில் வழக்கறிஞர்கள் டி.பி.சிங் மற்றும் என்.கே.மட்டா நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் எதிர் தரப்பில் வாதாடியது. அப்போது இதுபோன்று ஜாமீன் வாங்கியவர்கள் தங்களுக்கு சமுதாயத்தில் உள்ள பலத்தைக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடுவதாக கூறியது. மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி, மெகுல் சோக்சி மற்றும் சந்தேசரா சகோதரர்கள் என இதுவரை 36 பேர் சமீபத்திய வருடங்களில் தப்பி சென்றுள்ளதாக அமுலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்தது.