india

img

சொந்த மக்களையே அவமானப்படுத்துவதா? உ.பி. மாநில பாஜக அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் கண்டனம்

பிரயாக்ராஜ்;
குடியுரிமைத் திருத்தச் சட்டத் துக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் கடந்தடிசம்பர் 19-ஆம் தேதி போராட்டம்நடைபெற்றது. அப்போது, பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறி, ஏராளமானோர் மீது உத்தரப்பிரதேச பாஜக அரசு வழக்கு பதிவு செய்தது. 90 வயதைக் கடந்து, படுத்த படுக்கையாய் இருப்பவர்கள் மட்டுமன்றி, பல ஆண்டுகளுக்கு முன்பேஇறந்து போனவர்களும், ‘எழுந்துவந்து’ சொத்துக்களை சேதப் படுத்தியதாக ஆதித்யநாத் அரசு வழங்கு போட்டது. இவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறியது.

மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 53 பேரின் புகைப்படங்களைப் போட்டு, இவர்கள் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதற்கான நஷ்டஈடு தொகையை செலுத்தத் தவறினால், அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய் வோம் என்றும் விளம்பரம் செய்தது. இதுதொடர்பான பேனர்கள் அலகாபாத் முழுவதும் கட்டப்பட்டன.ஆரம்பத்திலேயே இந்த பேனர்பெரும் பரபரப்பையும், கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஆதித்யநாத் அரசின் செயல் கேவலமானது என்று விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர், நீதிபதி ரமேஷ் சின்கா ஆகியோர் அடங்கியஅமர்வு, தாமாகவே முன்வந்து, பேனர் விவகாரத்தை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘எந்த சட்டத்தின் கீழ் இந்த பேனர்கள் வைக்கப்பட்டன?’ என்று லக்னோ போலீஸ் கமிஷனர் சுஜித்பாண்டே, மாவட்ட ஆட்சியர் அபிஷேக் பிரகாஷ் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், குடிமக்களை அவமதிக்கும் எந்தநடவடிக்கையையும் அரசு மேற் கொள்ளக்கூடாது என்று தடை விதித்தனர்.விடுமுறை தினமான ஞாயிறன்றும் இந்த வழக்கை தொடர்ந்துவிசாரித்த நீதிபதிகள், அரசின்சார்பில் பேனர்கள் வைக்கப்பட் டது தனிநபர் உரிமைகளை பறிக்கும்செயல் என்று தீர்ப்பளித்து, உத்தரப்பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் அந்தபேனர்களை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளனர்.

;