புதுதில்லி:
நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மீது விமான நிறுவனங்கள் விதித்துள்ள 6 மாதத் தடை, அப்பட்டமான விதிமீறல் என்று விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண்குமார் கூறியுள்ளார்.பாஜக-வின் வெறித்தனமான ஆதரவாளர்களில் ஒருவர் அர்னாப் கோஸ்வாமி ஆவார். ரிபப்ளிக் தொலைக்காட்சியை நடத்தி வரும் இவரின், அருவருக்கத் தக்க நடவடிக்கைகள் பலமுறை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. இவர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு, லக்னோவிற்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, நகைச்சுவை நடிகர் குணால்கம்ராவும் அந்த விமானத்தில் இருந்துள்ளார்.அர்னாப் கோஸ்வாமியை பார்த்த குணால் கம்ரா, ஹைதராபாத்தைச் சேர்ந்ததலித் மாணவர் ரோகித் வெமுலா, பாஜகவினரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரோகித் எழுதிய 10 பக்க தற்கொலைக் கடிதத்தை, நேரம் கிடைக்கும் போது அர்னாப் வாசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். உங்களுக்கு கொஞ்சமாவது இதயம் இருந்தால் இதைச் செய்யுங்கள் என்றும் சற்று காட்டமாக கூறியுள்ளார். 2016-ஆம் ஆண்டு ரோகித் வெமுலா தற்கொலை செய்துகொண்டபோது, ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் பணியாற்றிய அர்னாப் கோஸ்வாமி, ரோகித்குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தார். அதற்காகவே, குணால் கம்ராதற்போது அர்னாப்பிடம் விவாதம் செய்துள்ளார். இதனை வீடியோவாகவும் கம்ரா வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியிடம் விவாதத்தில் ஈடுபட்டதற்காக, நடிகர் குணால் கம்ரா தங்களின் விமானங்களில் பறப்பதற்கு ‘இண்டிகோ’ மற்றும் ‘ஏர்இந்தியா’ நிறுவனங்கள், 6 மாதங்களுக்குத்தடை விதித்தன. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குணால் கம்ராமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை நியாயமற்றது என்று விமர்சனங்கள் எழுந்தன.தற்போது விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண்குமாரும், விமான நிறுவனங்களின் தடையை கண் டித்துள்ளார்.“இதுபோன்ற மோதலுக்கு விமான நிறுவனங்கள் முதலில் 30 நாட்கள் தற்காலிகதடை விதிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான உள்விசாரணை நடத்த வேண்டும். வாய்த் தகராறுகளுக் கான தடை 3 மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடாது; 6 மாதத் தடை விதிக்க வேண்டுமென்றால், அதற்கு விசாரணை முடிவடையும் வரை விமான நிறுவனங்கள் காத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.மறுபுறத்தில் இந்த தடையால் தாம்அதிர்ச்சியடையவில்லை என்று தெரிவித்துள்ள நடிகர் குணால் கம்ரா, தனதுபேச்சுரிமையை பயன்படுத்தி, ஒரு பத்திரிகையாளரின் ஈகோவை தூண்டிவிட்டதைத் தவிர, விமானத்தில் வேறு யாருக்கும்நான் இடையூறு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.