புதுதில்லி:
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும்தில்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீசாரின் தாக்குதலைக் கண்டித்து, பிஐபி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான கருத்து,மத்திய பாஜக அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமாகபிஐபி (Press Information Bureau- PIlB) உள்ளது. மத்தியஅரசின் செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கும் அமைப் பாகும். இந்நிலையில், தில்லியில் ஞாயிறன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, பிஐபி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வடுவிட்டர் பக்கத்தில், கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை, நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்எனவும் கருத்து பதிவிடப்பட் டுள்ளது.ஒரு அரசு நிறுவனத்தின் சமூகவலைத்தள பக்கத்திலேயே, இவ்வாறு அரசுக்குஎதிராக கருத்து வெளியானது, மத்திய பாஜக ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பரபரப்படைந்த அவர்கள், சில நிமிடங்களிலேயே அந்த டுவிட் டர் பதிவை நீக்க வைத்துள் ளனர்.பிஐபி டுவிட்டர் பக்கக் குழுவில் உள்ள பெண் ஒருவர்- அவரது தனிப்பட்ட கருத்தை பதிவிட்டு விட்டார் என்றும், இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும் அதே டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.