ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தின் பொரை யாஹ்ட் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் செவ்வாயன்று காலை 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. பள்ளியைச் சுற்றி சக ஆசிரியர்கள் கண்காணித்த பொழுது, மாணவர்கள் இல்லாத ஒரு அறையில் 2 ஆசிரியர்கள் துப்பாக்கிக் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். அருகில் மற்றொரு ஆசிரியர் துப்பாக்கியுடன் பலத்த காயத்துடன் கிடந் தார். பலத்த காயத்துடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர், மற்ற 2 ஆசிரியர்களையும் துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்து துப்பாக்கியால் சுட்டுக் கொண் டார் என முதல்கட்ட விசாரணையில் தக வல் வெளியாகியுள்ளது.
ஆனால் 2 ஆசிரியர்களையும் சக ஆசி ரியர் சுட்டுக் கொன்றதன் பின்னணி குறித்து முழுமையான தகவல் வெளி யாகாததால், போலீசார் அடுத்த கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர். மாணவர்களுக்கு போதனை வழங்கும் பள்ளி ஆசிரியரே, 2 ஆசிரியர்களை சுட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்ப வம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.