india

img

சிதறியது ஆர்எல்டி

முன்னாள் பிரதமர் சரண் சிங் கிற்கு பாரத ரத்னா விருது அறி விப்பை வெளியிட்டு “இந்தியா” கூட்  டணியில் அங்கம் வகித்த ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளத்தை (ஆர்எல்டி) தங்கள் பக்கம்  வளைத்தது பாஜக. ஆனால் ஜெயந்த்  சவுத்ரி அவரது நெருங்கிய ஆதரவா ளர்கள் மட்டுமே பாஜக கூட்டணிக்கு  ஆதரவாக உள்ள நிலையில், மற்ற வர்கள் ‘இந்தியா” கூட்டணிக்கே ஆத ரவாக உள்ளனர். 

இதன்வெளிப்பாடாக ஞாயி றன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகாருக்கு வருகை தந்த காங்கி ரஸ் யாத்திரையில் ஆர்எல்டி பொதுச்  செயலாளர் சுனில் சிங் தலைமையில்,  ஆயிரக்கணக்கான ஆர்எல்டி தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்எல்டியின் ஜெயந்த் சவுத்ரி மட்  டுமே பாஜகவுடன் உள்ளார். பல்வேறு  தலைவர்கள், தொண்டர்கள் காங்கி ரஸ் - சமாஜ்வாதியுடன் உள்ளோம் என யாத்திரையில் கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.