தேர்தல் நெருங்கும் வேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்தது. கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் மோடி அரசு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை படிப்படியாக ரூ.1000 வரையில் உயர்த்தியது. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், மகளிர் தினத்தை காரணம் காட்டி ரூ.100 குறைக்கப்படுவதாற்கு பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.