ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் வெள்ளியன்று டிசம்பர் மாத நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,”கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளின் ஆன் லைன் பணப்பரிவர்த்தனைக்கான உச்ச பட்ச வரம்பு ரூ.1 லட்சமாக இருந்த நிலை யில், இனி ரூ.5 லட்சம் வரை தனிநபர் ஒருவர் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யலாம் எனவும், மருத்துவமனை கள், கல்வி நிலையங்களில் தனிப்பட்ட நபர் ஒருவர் ரூ. 5 லட்சம் வரை யுபிஐ செயலி மூலமாக செலுத்தலாம்” எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், “வங்கிகளுக் கான ரெப்போ வட்டி விகிதம் 5-ஆவது முறையாக எந்தவித மாற்றமுமின்றி 6.5 சதவிகிதமாகத் தொடரும் என்றும், வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை” என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பம் :
யுபிஐ செயலி தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ஒன்றுதான் என்றா லும், இரண்டுவிதமான குழப்பமான கருத்துக்களை கொண்டுள்ளது. அதா வது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை உச்சபட்ச வரம்பு மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு மட்டுமா? இல்லை அனைவருக்குமா என ரிசர்வ் வங்கி விளக்கமாக குறிப்பிடவில்லை. இதனால் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.