india

img

பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டுமே மோடிக்கு நம்பிக்கை

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா வுக்கு பழிவாங்கும் நடவடிக்கை யில் மட்டுமே நம்பிக்கை உள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலா ளர் ஜெய் ராம்  ரமேஷ் குற்றச்சாட்டி யுள்ளார். 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா  கட்சியின் தலைவ ரும், முன்னாள்  முதல்வருமான ஹேமந்த் சோரனை அம லாக்கத் துறை கைது செய்தது தொடர்  பாக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதா பாத்தில் ஜெய் ராம் ரமேஷ் கூறுகை யில், “ஹேமந்த் சோரன் மீதான கைது  நடவடிக்கை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் துன்புறுத்தல் மற்றும் பழி வாங்கும் அரசியல் நடவடிக்கை ஆகும்.  தனக்கு எதிராக உள்ள எதிர்க்கட்சியி னரை தொந்தரவு செய்வதற்காக அம லாக்கத்துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட  மத்திய அமைப்புகளை பிரதமர் மோடி  அதிகம் பயன் படுத்துகிறார். இது ஜன நாயக அரசியலுக் கும், அரசியலமைப் பிற்கும் எதிரானது. இதனால் அமலாக்கத்  துறை, சிபிஐ பிரதமர் மோடியின் சகோ தரர்கள் என்பதை நாங்கள் மீண்டும் கூறு கிறோம். இதை எதிர்த்துப் போராடு வோம். நாங்கள் பயப்பட மாட்டோம். 2024 மக்களவைத் தேர்தலில் தோற்றால்  பாஜகவிற்கு  எதிராக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை கண்டிப்பாக களமி றக்குவோம்” என அவர் கூறியுள்ளார்.