india

img

மோடி வெறுப்பு பேச்சு - பாஜக தலைவர் நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் விதிகளுக்கு எதிரான மோடியின் வெறுப்பு பேச்சுக்கு, வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 11 மணிக்குள் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது, முஸ்லிம்களை  ஊடுருவியவர்கள், அதிக குழந்தை பெற்றெடுத்தவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர்களுக்கு நாட்டின் அனைத்து செல்வங்களையும் காங்கிரஸ் கொடுத்துவிடும் என வெறுப்பு பேச்சை விதைத்துள்ளார். மோடியின் பொய் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்தது. மோடி வெறுப்பு பேச்சு குறித்து அகமதாபாத் ஐஐஎம் முன்னாள் பேராசிரியர் ஜக்தீப் சோக்கர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். பேராசிரியர் ஜக்தீப் சோக்கர் புகார் கடிதத்தை ஆதரித்த 93 ஓய்வுபெற்ற குடிமைப்பணி அதிகாரிகள், மோடியின் வெறுப்புப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் சர்வதேச பத்திரிகைகளிலும் மோடியின் வெறுப்பு பேச்சு குறித்து செய்திகள் வெளியாகின. மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு எதிராக இதுவரை 2,200 புகார் மனுக்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் விதிகளுக்கு எதிரான மோடியின் வெறுப்பு பேச்சுக்கு, வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 11 மணிக்குள் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;