india

பான்-ஆதார் இணைப்பு தாமதம் ரூ.601.97 கோடியை வசூலித்த மோடி அரசு

புதுதில்லி, பிப்.5- பான்-ஆதார் இணைப்பதில் ஏற் பட்ட கால தாமதத்திற்காக பிரதமர்  மோடி தலைமையிலான அரசு ரூ.601.97 கோடி அபராதம் வசூலித்துள்ளது.  பான்-ஆதார் இணைப்பதில் ஏற்பட்ட கால தாமதத்திற்காக (2023 ஜூலை 1-ஆம் தேதி முதல் 2024-ஆம்  ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை  மோடி தலைமையிலான அரசு ரூ.601.97 கோடி அபராதம் வசூ லித்துள்ளது.

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி  தேதி 2023 ஜூன் 30 என நிர்ணயித்திருந்த தாக ஒன்றிய அரசு விளக்க மளித்துள்ளது.  சுமார் 11.48 கோடி நிரந்தர கணக்கு எண்கள் இன்னும் பயோமெட்ரிக் அடையாளத்துடன் இணைக்கப்பட வில்லை திங்களன்று  நாடாளு மன்றத்தில் நிதித்துறை இணை அமை ச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி 2023  ஜூன் 30. இதற்குப் பின்னர் வந்த வாடிக்கையாளர்களிடமிருந்து தலா ரூ.1,000 தாமதக் கட்டணமாக  வசூலித்து அரசு ரூ.600.97 கோடி சம்பாதித்துள்ளது.

வருமான வரித் துறை, ஆதாரை இணைக்கத் தவறிய வரி  செலுத்துவோரின் பான் எண் 2023 ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல் படாது. என்றும்  மேலும், டிடிஎஸ்., டிசிஎஸ் அதிக சதவீதம் கழிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.