india

img

பிரதமர் மோடியின் லட்சத்தீவு விசிட்

பிரதமர் மோடி கடந்த 2-ஆம் தேதி  நலத்திட்டங்களை துவங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக  கேரள மாநிலத்திற்கு அருகே உள்ள தீவு பகுதியான லட்சத்தீவுக்கு சென்றி ருந்தார். பிரதமர் மோடியின் இந்த பய ணம் லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்  படுத்தும் நடவடிக்கை என ஒன்றிய  அரசு வட்டாரங்களில் தகவல் வெளி யாகிய நிலையில், மாலத்தீவு சுற்று லாத் துறை அமைச்சர் அப்துல்லா மஹ் சூம் மஜித் தனது சமூகவலைதளப் பக்  கத்தில், “இந்தியா மாலத்தீவை குறி வைக்கிறது. கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்  கும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது இக்கருத்து சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில், மாலத்தீவு  அமைச்சரின் கருத்து, சர்ச்சையைக்  கிளப்பியுள்ளது. இந்நிலையில்,  அவர் இது தனது தனிப்பட்ட கருத்து என விளக்கம அளித்துள்ளார்.

இந்தியா - மாலத்தீவு  உறவில் விரிசல்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடாக மாலத்தீவு உள்ள  நிலையில், கடந்த ஆண்டு மாலத்தீவின்  புதிய ஜனாதிபதியாக முகமது முய்சு பொறுப்பேற்றப் பின் இருநாட்டு உற வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தேர்தல்  பிரச்சாரத்தின் பொழுது முகமது முய்சு, “மாலத்தீவில் வெளிநாட்டு ராணுவம் இருக்கக்கூடாது.

முக்கியமாக இந்திய ராணுவக்குழுவை இம்மண்ணிலிருந்து வெளியேற்றுவேன்” எனக் கூறியது மட்டுமல்லாமல், ஜனாதிபதியாக பொறுப்பேற்றப் பின் துபாய் கால நிலை மாநாட்டில் கூட மாலத்தீவில் இருந்து 77 இந்திய ராணுவ வீரர்களை  திரும்பப் பெறுமாறு பேசியதாக தக வல் வெளியானது.

டைவிங் முறைக்கு லைப் ஜாக்கெட் எதற்கு? 

சமூக வலைத்தளங்களில் வறுபடும் மோடியின் லட்சத்தீவு ஷூட்டிங்

பிரதமர் மோடி லட்சத்தீவு பயணத் தின் பொழுது கடற்கரை அழகை  ரசிப்பது போலவும், கடலில் இறங்கி  ஆழ்கடலை ஆராய்ச்சி மேற்கொள் வது போல இரண்டு ஷூட்டிங்கை ஒளிப்பதிவு செய்து அதனை தனது  டுவிட்டர் எக்ஸ் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். 

இதில் ஆழ்கடலில் ஆராய்ச்சி  செய்வது போல (ஸ்கூபா டைவிங்)  2 கடற்படை வீரர்களுடன் எடுக்கப் பட்ட ஷூட்டிங் வீடியோவில், பிரத மர் மோடி லைப் ஜாக்கெட் (நீரில்  மூழ்காமல் இருக்கும் உபகரணம்) மற்  றும் ஸ்கூபா ஆக்சிஜன் உபகர ணத்துடன் (நீரில் மூழ்கியும் உயிரை  காக்கும் உபகரணம்) கடலில் இறங்கி னார். இதை கேளிக்கையான விஷ யம் என்னவென்றால் லைப் ஜாக்  கெட், ஸ்கூபா ஆக்சிஜன் உபகரணம்  ஒன்றுக்கு ஒன்று எவ்வித தொடர்பும்  கிடையாது. நீரில் மூழ்காமல் இருக்  கவே லைப் ஜாக்கெட். நீரில் மூழ்கி  ஆராய்ச்சி செய்ய ஸ்கூபா ஆக்சி ஜன் உபகரணம் தேவை என்ற நிலை யில், இரண்டையும் சேர்த்து அணிந்து  ஆழ்கடலில் ஆராய்ச்சி என்ற பெய ரில் ஷூட்டிங் செய்து சமூவலைத் தளங்களில் வறுபட்டு வருகிறார் பிர தமர் மோடி. மோடியின் இந்த லட்சத்  தீவு ஷூட்டிங் வீடியோ மற்றும் புகைப்  படங்கள் சமூகவலைத்தளங்களில் டாப் ஆர்டரில் டிரெண்ட் ஆகி வரு கிறது.