india

img

“இந்தியா” கூட்டணிக்கு ஆதரவாக களமிறங்கும் அஜித் பவாரின் சகோதரர்

ஏக்நாத் ஷிண்டே சிவசேனா வை இரண்டாக உடைத்து  பாஜக ஆதரவுடன் மகா ராஷ்டிரா முதல்வரானது போல், சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங் கிரஸ் கட்சியை உடைத்து துணை முதல்வராக உள்ளார்.  பாஜக ஆதரவுடன் 41 எம்எல்ஏக் களை தனது பக்கம் வளைத்தது  போல, மோடி அரசின் ஆதரவு டன் தேர்தல் ஆணையத்திடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் பெயர் மற்றும் சின்னத்தை  அஜித் பவார் தரப்பு வாங்கியுள் ளது.

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் (41 பேர்) மட்டுமே  அஜித் பவாருடன் உள்ள நிலை யில், மற்ற முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், மக்கள் ஆதரவு என அனைத்தும் சரத் பவாரிடமே உள்ளனர். இதனால் சரத்பவாரின் புகைப்படத்தை வைத்து மக்களவை தேர்தலை சமாளிக்க அஜித் பவார் திட்டம்  வகுத்தார். ஆனால் உச்சநீதிமன்  றம் சரத் பவார் படத்தை பயன்  படுத்தக் கூடாது எனக் கூறியது. இதனால் அஜித் பவார் கடந்த ஒரு  வாரமாக வெளியே தலைகாட்டா மல் இருந்த நிலையில், அஜித் பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவார் சரத் பவாருக்கும், “இந் தியா” கூட்டணிக்கு ஆதரவாக களமிறங்கி பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

ஞாயிறன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட் டத்தில் ஸ்ரீனிவாஸ் பவார் பொது மக்கள் முன்னிலையில் பேசுகை யில்,”நான் என் சகோதரனுக்கு எதிரானவன் என்று நீங்கள் ஆச்ச ரியப்படலாம். ஆனால் சரத்  பவாரை அஜித் பவார் கைவிட்ட போது நான் மிகவும் வருத்தப் பட்டேன். இது நல்லதல்ல. நிலம்  தங்கள் பெயரில் உள்ளது என்ப தற்காக பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றும் நிகழ்வை அஜித் பவார் செய்துள்ளார். ஒவ்  வொரு உறவுக்கும் காலாவதி தேதி உண்டு என்ற நிலையில், பாஜகவின் சதியால் தேசியவாத காங்கிரஸ் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் சரத் பவாருக்கு ஆதர வாக களமிறங்குவேன்” எனக் கூறினார்.

மனைவிக்கு பிரச்சாரம் செய்ய கூட ஆளில்லை
தேசியவாத காங்கிரஸ் தலை வர் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே வரவிருக்கும் மக்களவை தேர்தலில் வழக்கம் போல பார மதி தொகுதியில் களமிறங்கு கிறார். சுப்ரியா சுலே நாடாளு மன்றத்தில் பாஜகவிற்கு எதிராக வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதமர் மோடியை  திக்குமுக்காட வைப்பவர் என்ப தால், மக்களவை தேர்தலில் அஜித் பவார் தரப்புக்கு 4 சீட்களை கொடுத்து, பாரமதி தொகுதியில் சுப்ரியா சுலேவை  வீழ்த்த அஜித் பவார் மனைவி  சுனித்ரா பவார் நிறுத்தப்பட்டுள் ளார். இத்தகைய சூழலில் பார மதியில் சுப்ரியா சுலேவுக்கு ஆத ரவாக அஜித் பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவார் களமிறங்கி பிரச்சாரம் செய்ய உள்ளதால், தனது குடும்ப உறுப்பினர்  களே தன்னை புறக்கணித்துள்ள தால் அஜித் பவார் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.