புதுதில்லி, டிச. 20 - விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் புதனன்று அறி வித்தது. இதில், தமிழ்நாடு செஸ் வீராங்கனை ஆர். வை ஷாலி (செஸ் வீரர் பிரக்ஞா னந்தாவின் சகோதரி), இந்திய வேகப்பந்து வீச்சா ளர் முகமது ஷமி, பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, பார்வையற்ற கிரிக்கெட் வீரர் இல்லூரி அஜய் குமார் ரெட்டி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 26 பேருக்கும் 2024 ஜனவரி 9 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கப்பட உள்ளது