india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

அனைத்து மக்களுக்கும் 2024 இனிய  புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்கு கிறேன்.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சிறந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான பணிகளை இரட்டிப்பாக்குவோம்.

நாம் விரும்புவதை உண்ண, நாம் விரும்பும் வகையில் உடை உடுத்த, நாம் நம்பிக்கை கொள்பவர்களோடு நட்பு கொள்ள, ஒரு வளமிக்க வாழ்வை தேர்வு செய்து வாழ்ந்திட ஏதுவான ஒரு சிறந்த இந்தியாவை கட்டமைப்பதற்காக ஒன்றிணைவோம்.  

அமைதி, வளம், சகோதரத்துவம், நல்லிணக்கம் என அனைத்தும் இந்த இனிய புத்தாண்டில் வலுப்பெறட்டும். கடந்த ஆண்டில் மிகக்கடுமை யாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளுக்கும் ஒரு சிறந்த எதிர்காலம் அமையும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கட்டும் என வாழ்த்துகிறேன்.