india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் குளிர் வாட்டி வரும் நிலை யில் ஜம்மு கோட்டத்தின் கோடை மண்ட லங்களில் செயல்படும் 12-ஆம் வகுப்பு வரை யிலான அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜனவரி 22 முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக ஜம்மு பள்ளிக் கல்வி இயக்கு னர் உத்தரவிட்டுள்ளார். 

வாடிக்கையாளர்களின் பணம் 52 கோடி  ரூபாயை திருடி இணையத்தில் விளை யாடிய பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் ஊழி யருக்கு சொந்தமான சொத்து விவரங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.

‘மணிப்பூரின் மாநில தினத்திற்கு வாழ்த்து தெரி விக்க நேரமுள்ள பிரதமருக்கு, அங்கு செல்  லவோ அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக  உரிய நடவடிக்கைகள் எடுக்கவோ நேரமில்லை’ என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரி வித்துள்ளது.

ஒய்எஸ்ஆர் ஷா்மிளா மூத்த தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள்  முன்னிலையில் ஞாயிறன்று ஆந்திர மாநில  காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலம் விக்ரோலி கிழக்கு பகுதி யில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மருத்துவ மனையில் ஞாயிறன்று அதிகாலை 1.47 மணியள வில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்  கள் துரிதமாக தீயை அணைத்ததால் நோயாளிகள்  உட்பட யாருக்கும் காயமின்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.