india

img

முன்னாள் ராணுவத்தினர் ஓய்வூதியம் திருத்தியமைப்பு!

புதுதில்லி, ஜூலை 30 - ‘ஒரே பதவி ஒரே ஊதியம்’ என்னும் திட்டத்தின் கீழ் 1.7.2024 முதல் ராணுவத்தினரின் ஓய்வூதி யத்தைத் திருத்தியமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக, ஆர். சச்சிதானந்தம் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில், திண்டுக்கல் தொகுதி சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.

அதில், 2024 ஜூலை 1 முதல் மாதாந்திர அடிப்படையில் ‘ஒரே பதவி ஒரே ஊதியம்’ என்னும் திட்டத்தினை ஏற்றுக்கொண்டதன் மூலம் ஏற்பட்டுள்ள கூடுதல் ஓய்வூதியத்தை முன்னாள் ராணுவத்தினருக்கு அளித்திடும் முன்மொழிவு ஏதேனும் அரசிடம் உள்ளதா? என்றும் ஆம், எனில் அதன் விவரங்கள் என்ன? என்று கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்துமூலம் பதிலளித்துள்ள ஒன்றிய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் சேத், “‘ஒரே பதவி ஒரே ஊதியம்’ என்னும் திட்டத்தின்கீழ் முன்னாள் ராணு வத்தினரின் ஓய்வூதியம் 2024 ஜூலை 1 முதல் திருத்தி அமைக்கப்படுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இதனால் ஏற் டும் நிலுவைத் தொகை ஒரு நிதியாண்டிற்குள் அளிக்கப்பட்டுவிடும்” என்று தெரிவித்துள்ளார். (ந.நி.)